புதிதாக மதுபான கடை அமைவதை தடுத்து நிறுத்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கோரிக்கை..!

புதிதாக மதுபான கடை அமைவதை தடுத்து நிறுத்த தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் கோரிக்கை..!

இராமநாதபுரம் :
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தற்போது அரசு டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக புதிய கட்டிடம் கட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு அந்த பகுதியில் மதுபான கடை அமைந்தால் அதை தாங்கள் ஜேசிபி கொண்டு இடித்து அகற்றுவோம் என அரசுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஏர்வாடியிலிருந்து கொம்பூதி வழியாக ராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் விவசாயப் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாய நிலத்தில் மதுபான கடை கட்டிடத்தை கட்டி முடித்துள்ளனர். இந்த இடத்தின் அருகில் பெண்கள் குளிக்கும் குளம் இருப்பதாலும், விவசாய பகுதியில் மதுபான கடையை திறப்பதாலும் விவசாயம் செய்யும் விவசாயிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளார்கள்.
மேலும், இப்பகுதியில் வாழும் இரு சமுதாய மக்களும் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக இப்பகுதி உள்ளதால் அன்றாட தொழிலாளர் கால்நடை மேய்த்தல், விறகு வெட்டுதல்,போன்ற விவசாய தொழில்களை நம்பி வாழ்ந்து வரும் மக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படும்.
இந்த நிலையில், அங்கு அமையப்போகும் மதுபான கடையால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிப்படையும்.எனவே விவசாயம் செய்யும் பெண்கள் வயல்வெளிக்கு செல்லப்பயப்படுவார்கள்.
இது குறித்து, ஏற்கனவே நான்கு முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளோம். ஆனால், இப்போது மீண்டும் கடை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. எனவே மக்களின் நல்வாழ்வு காக்க புதிய மதுபான கடை அமைவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கிறோம். அதை மீறி அரசு அங்கு மதுபான கடையை அமைத்தால் நாங்கள் அதை உடைத்து எறிவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.