கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம் மற்றும் அஸ்வான் மதரஸா சார்பில் பரிசளிப்பு நிகழ்வு!!

கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம் மற்றும் அஸ்வான் மதரஸா சார்பில் பரிசளிப்பு நிகழ்வு!!

கீழக்கரை :
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அகமது தெரு பொதுநல சங்கம் மற்றும் அஸ்வான் மதரஸா சார்பில் பரிசளிப்பு விழா அஸ்வான் பெண்கள் மதரஸாவில் நடைபெற்றது, இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை காஜியும் மேலத்தெரு ஜாமிஆ அரூஸிய்யா தைக்கா முதல்வருமான மௌலானா மௌலவி ஸலாஹூத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி தலைமை தாங்கினார் மேலும் பாங்கு,இகாமத்,தொழுகை, ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது,
இவ்விழாவிற்கு புதுப்பள்ளி கதீப் மௌலானா மௌலவி முஹம்மது மன்சூர் அலி நூரி ஆலிம், வடக்குத்தெரு கதீப் மௌலானா மௌலவி கலீல் ரஹ்மான் ஃபைய்யாஜி ஆலிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், நிஃமத்துல்லாஹ் அல்குத்ஸி ஆலிம், முகமது அதீக் ஹசநதி ஆலிம், செயலாளர் நைனா முகம்மது, சங்கத்தின் உறுப்பினர்களான இபுனு,ஹாஜா நஜிமுதீன், ஒருங்கிணைப்பாளர்
ஏ.எஸ்.கஃபார் கான் மற்றும் உறுப்பினர்கள் செய்யது இபுராஹிம், சதக் ஆசாத் ,பர்விஸ்,நௌபல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ஆண்கள் மதரஸா மற்றும் பெண்கள் மதரஸா ஆசிரியர்களுக்கு அஸ்வான் சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கீழக்கரை அஹ்மது தெரு பொதுநல சங்கம் தலைவர் சுல்தான், அமீரகத் தலைவர் ஹமீது கான் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர்.