கமுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிப்பு

கமுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிப்பு

கமுதி :
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி -பேருந்து நிலையம் எதிரே தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்டம் மற்றும் கமுதி ஒன்றிய கழகம் சார்பில்
சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி,இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா ஆலோசனையின்படி,
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மதன் தலைமையில்,
சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திரு வுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 500 க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் குழு
கிஷோர்குமார்,
மணிகண்டன்,சதீஷ்வரன்
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கமுதி ஒன்றிய செயலாளர் காமேஷ் மகாதேவன்,மேற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் அர்ஜுன் பாண்டியா,மாவட்ட மாணவரணி பொறுப்பாளர் மனோஜ் குமார்,மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர்
வீரபாண்டி,மாவட்ட
மீனவரணி பொறுப்பாளர்
முத்துக்குமரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்
ராஜசரண், பரமக்குடி நகர் மாணவரணி
பொறுப்பாளர் விக்னேஷ்,
பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன்
கமுதி ஒன்றிய கொள்கை பரப்பு அணி அமைப்பாளர் முனியாண்டி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்
பெரியகீர்த்தனன் மற்றும்
காடமங்கலம்,கீழராமநதி ,
கருங்குளம், பாப்பனம்,
சடையனேந்தல், பெருமாள் குடும்பன்பட்டி ஆகிய கிளைகழகம் மற்றும் அபிராமம் பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
படம்
கமுதியில் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்டம் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.