முன்னாள் சிறைவாசிகளுக்கு நிதி உதவி

ராமநாதபுரம் :

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலம் விடுதலை அடைந்த 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு தலா ரூபாய் 50,000 வீதம் 3 கோடி 75 லட்சம் நிதி உதவி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக துணை முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்டது.
இது குறித்து பரமக்குடி சிறை நன்னடத்தை அதிகாரி பன்னீர்செல்வம் கூறியதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அடைந்த முன்னாள் சிறைவாசிகள் 10 நபர்களுக்கு ரூபாய் 50,000 வீதம் 5 லட்சம் பெற்று வழங்கப்பட்டது இந்த நிதி உதவி முன்னாள் சிறைவாசிகளின் மறு வாழ்விற்காகவும் சமூக ஒருங்கிணைப்பிற்காகவும் வழங்கப்பட்டது.
மேலும் இவர்கள் சிறு குறு தொழில்கள் தொடங்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆடுகள் மற்றும் பசு மாடுகள் வாங்கி வளர்த்தல் வேளாண் உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றிற்காக வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார். மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் விடுதலை அடைந்த சிறைவாசிகளுக்கு என்று தமிழ்நாடு சிறை மீண்டோர் நல சங்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்