இராமநாதபுரம் : நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம்

இராமநாதபுரம் :

இந்திய அரசின் இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் விளையாட்டுத் துறை, அண்ணா பல்கலைக்கழக நிதியுதவியுடன்
இராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நாட்டு நல பணித்திட்டத்தின் சார்பாக ஏழு நாட்கள் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் புல்லங்குடி கிராமத்தில் நடைபெற்றது.
முகாம் தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் மாவட்டம் கிராம ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தவல்லி, புல்லங்குடி ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ஆர்த்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தர்வேணி, பள்ளி ஆசிரியர்கள், ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் மற்றும் கல்லூரி கண்காணிப்பாளர் ராஜகுமார் அவர்களும் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியைச் சார்ந்த துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் நூலகர் சிறப்புரையாற்றினர்.
முகாம் நிறைவு விழா உரையில் கல்லூரி முதல்வர் உதயகுமார் நாட்டு நல பணித்திட்டத்திற்காக
மத்திய அரசு மற்றும் தமிழக அரசு மாணவர்களுக்கு எவ்வாறு உதவி செய்கிறது என்றும் இதனால் மாணவர்கள் அடையும் பயன்களையும் எடுத்துரைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் விஜயராகவன் செய்திருந்தார். கட்டடவியல் துறை தலைவர் லாவண்யா நன்றியுரை கூறினார்.
