தமிழ்நாடு
திருநெல்வேலி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில செயற்குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில செயற்குழு

திண்டுக்கல் :
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலி மாநகரில் இன்று (18-02-2025) மாலை மாநில இளைஞரணி தலைவர் முகம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது.
இளைஞரணி பொருளாளர் அபு பாரிஸ் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் அன்சாரி மதார் வரவேற்புரை ஆற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் அவர்கள் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினர்.
இளைஞரணி மாநில முதன்மை துணைத் தலைவர் கடாஃபி நன்றியுரை ஆற்றினார்.
சமுதாய சேவைகள், பயிலரங்கம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.