இராமநாதபுரம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் மாவட்ட IFTN (தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு) பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் தலைமையில், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சபீர் ரஹ்மான் முன்னிலையில் நடைபெற்றது.
IFTN இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சையத் இப்ராஹிம் வரவேற்புரை ஆற்றினார். IFTN மாநில உலமா அணி தலைவர் சாகுல் ஹமீது துவக்க உரையாற்றினார். IFTN மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் மற்றும் IFTN மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சபீர் ரஹ்மான் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
IFTN இராமநாதபுரம் மாவட்டம், புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தலைவராக முஹம்மது ஃபரூஸ்
கீழக்கரை,செயலாளராக
சையத் இப்ராஹிம்
கீழக்கரை,பொருளாளராக
ஜாகிர் உசேன்
R S மங்கலம், ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது,