மீனவர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் உடன் சந்திப்பு

மீனவர் சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் உடன் சந்திப்பு

சென்னை :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பிப் ,18 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில், இராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகள், இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் என். தேவதாஸ், பாய்வா, ஏ.பி. முருகன், தங்கச்சிமடம் அனைத்து விசைப்படகு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா, பொருளாளர் ஆர். சகாயம், இணை செயலாளர் பி. ஆல்வின், பாம்பன் நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. ராயப்பன், நிர்வாகி ஆரோக்கிய தீபக், மண்டபம் அனைத்து விசைப்படகு சங்க நிர்வாகிகள் ஜாகீர் உசேன், திவாசீம் ஆகியோர் சந்தித்து, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், மீனவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதையும் தடுத்திட ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
இச்சந்திப்பின்போது, மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், மாநில மீனவர் அணிச் செயலாளர் டாக்டர் ஜோசப் ஸ்டாலின், துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ராமவன்னி ஆகியோர் உடனிருந்தனர்.”
