திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மகளிர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம்

திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மகளிர் அணியின் மாநில பொதுக்குழு கூட்டம் ஸ்ரீ மீனாட்சி திருமண மஹால் திருச்சியில் 16/02/25 அன்று காலை நடைபெற்றது.
முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மைதீன் Ex MP,மாநில பொதுச் செயலாளர் K.A.M.முகமது அபூபக்கர் Ex MLA, மாநில பொருளாளர் M.S.A.ஷாஜகான் முன்னிலையில் தமிழ்நாட்டின்
22 மாவட்டங்களில் இருந்து 160க்கும் மேற்பட்ட மகளிர் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு மாநில நிர்வாக குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மகளிர் அணியான இந்திய யூனியன் விமன்ஸ் லீக் மாநில தலைவராக A.S.பாத்திமா முசாபர் MC,பொதுச் செயலாளர் வழக்கறிஞர் M.ஆயிஷா, பொருளாளர் A.M.ஜைத்தூன், முதன்மை துணை தலைவர் மெஹர் நிஷா சாகுல் ஹமீத் Ex MC கோயம்புத்தூர், துணைத்தலைவர் மும்தாஜ் MC தூத்துக்குடி, துணைத்தலைவர் ஆயிஷா விழுப்புரம்,துணை தலைவர் ஆயிஷா மாலிக் சென்னை, மாநில செயலாளர் முனைவர் ஃபைரோஸ் திருச்சி, மாநிலச் செயலாளர் பொறியாளர் சபுரா பேகம் தென்காசி, மாநில செயலாளர் முனைவர் பாத்திமா நிஷா மதுரை ,மாநில செயலாளர் ஷமீம் ஷாஜஹான் MC ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய தலைவர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டின் எட்டு மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக நஹிதா கான் சென்னை, கே.சர்மிளா நசீர் கடலூர், ஆலிமா ஷபானா திருவண்ணாமலை, ஷமீம் பேகம் அய்யம்பேட்டை, ஆரிஃபா திருச்சி, ஆயிஷா தர்மபுரி, காமிலா பேகம் எமனேஸ்வரம், பரிதா இரவண சமுத்திரம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மகளிர் அணியின் மாநில பொது குழு வெற்றிமரகரமாக நடைபெற்றது.