தமுமுக மருத்துவ முகாம்

தமுமுக மருத்துவ முகாம்…*

தங்கச்சிமடம் :
மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு…
இன்று 15.02.2025 தங்கச்சிமடம் கிளை
தமுமுகமருத்துவசேவை_அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஆரோக்கியா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்.
சிறப்பு அழைப்பாளராக…
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான்,
தமுமுக மாநில செயலாளர் முஸ்தாக், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது,
தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமாத் தலைவர் சியாமுதீன்.
கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
மருத்துவர்கள் Dr.ராஜு, Dr.ஆசிஷ் மற்றும் செவிலியர்கள் முகாமை சிறப்பாக பரிசோதனை செய்தனர்.
பயனாளிகளாக 185 பேர் கலந்து கொண்டனர். 36 பேர் பரிந்துரை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறப்பு அழைப்பாளராக…
திரு. சாம்சன்
பரதவர் சமுதாய தலைவர்
திரு.கதிரேசன்
திமுக நகர் செயலாளர், தங்கச்சிமடம்
திரு. ஜேம்ஸ்
பட்டங்கட்டியார் சமுதாய தலைவர்
கலந்து கொண்டுடனர்.
மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம்,மமக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான், மாவட்ட மாவட்ட துணை செயலாளர் மைதீன்ராஜா, தங்கச்சி மடம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம், சிறப்பாக செய்திருந்தனர்.
