கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

கீழக்கரை :
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள ஹமீதியா தொடக்கப்பள்ளியின் 92 ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினர்.
இந்த விழாவில் பள்ளியின் தாளாளர் சிராஜுதீன், பள்ளி தலைமை ஆசிரியை ஹமீது நிஷா, அனைவரையும் அழைப்பித்து மகிழ்ந்தனர், மேலும் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி தாளாளர் முகைதீன் இப்ராஹிம், கீழக்கரை மஹ்துமியா பள்ளி தாளாளர் நாதியா ஹனிபா ஹனிபா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஜேக்கப் வாழ்த்துரை வழங்கினார்,நிர்வாகிகள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.