இராமநாதபுரம்

பசும்பொன் தேவர் சாதி சமயத்திற்கு அப்பாற்பட்ட மாபெரும் தேசியத் தலைவர் என பகுஜன் தேசிய கட்சியின் தலைவர் பிரமோத் குறில் பேட்டி

பசும்பொன் தேவர் சாதி சமயத்திற்கு அப்பாற்பட்ட மாபெரும் தேசியத் தலைவர் என முன்னாள் எம்.பி பகுஜன் தேசிய கட்சியின் தலைவர் பிரமோத் குறில் பேட்டி

கமுதி :
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் பகுஜன் தேசிய கட்சி தலைவர் மரியாதை செலுத்தினார்.

கமுதி அருகே சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய மாபெரும் தலைவரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஸ்தாபகர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பகுஜன் தேசியக் கட்சியின்( அம்பேத்கர்) தேசியத் தலைவர் பிரமோத் குறில், அகில இந்திய டி.என். டி நல சங்கத்தின் தமிழக பொதுச் செயலாளர் மு.வீரப்பெருமாள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் பசும்பொன் வருகை தந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்பு தேவரின் பூஜை அறை, தேவர் வீடு, வரலாற்று ஆவணங்கள், புகைப்பட கண்காட்சி ஆகியவற்றை பார்வையிட்டார், தேவர் நினைவாலயத்தின் பொறுப்பாளர் காந்திமினாள் நடராஜன்தேவர் நேரில் சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது
நமது நாடு விடுதலை பெற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடன் இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்டவர், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் அவருடைய நினைவு ஆலயத்திற்கு இன்று நான் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் தமிழகம் பலமுறை வருகை தந்திருந்தாலும் பசும்பொன்னுக்கு வருவது இதுவே முதல்முறை இனிவரும் காலங்களில் தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வேன் என கூறினார். தமிழகத்தில்
காலம் காலமாக ஆட்சியாளர்கள் தங்கள் சுய நலத்திற்கும், சாதிப் பிரிவினை பேசிப் பேசி இரு சமூக மக்களிடையே பகையுணர்வை மட்டுமே வளர்த்துள்ளனர்,பசும்பொன் தேவர்
புறந்தள்ளப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து பல்வேறு வகைகளில் உழைத்தவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் போன்ற தேசியத் தலைவர்களை பாடமாகக் கொண்டு பட்டியலின – பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் சகோதரத்துவ உணர்வோடு வாழ இளம் தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டும் என்பதையும், மத்திய ,மாநில அரசுகள் அரசு பொது நிறுவனம், பள்ளிகள், கல்லூரி,மருத்துவமணை, பல்கலைக்கழகம், மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையம் ஆகியவற்றுக்கு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்டி அனைத்து மக்கள் மத்தியில் அவரை பொதுவான தலைவராக அடையாளப் படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சாதிப் பிரிவினையை தூண்டும் அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக சகோதரத்துவத்தை வளர்க்க எங்கள் பகுஜன் தேசியக் கட்சி (அம்பேத்கர்) தொடர்ந்து இந்தியா முழுவதுமாக பணி செய்யும் என்பதையும் உறுதிப்படுத்தினார். பிறகு கமுதி தேவர் கல்லூரி, புளிச்சிக்குளம் தேவர் எஸ்டேட், சிட்டவண்ணாங்குளம் கிராமம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பகுஜன் தேசியக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பகுஜன் லூயிஸ், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன்,பசும்பொன் தேசியக் கழகத்தின் மாநில தொழிற்சங்க செயலாளர் புல்லட் கார்த்திக், மத்திய சிறு குறு நிறுவனங்கள் தலைவர் வீரணன்,கமுதி தாலுகா மறவர் சங்கத்தின் பொருளாளர் செல்லப்பாண்டியன், தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மூக்கூரான், பொருளாளர் முத்துக்கிருஷ்ணன், துணைச் செயலாளர் சக்கரை முனியசாமி,அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவர் அணி மத்திய குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன், கமுதி ஒன்றியத் தலைவர் கருப்பசாமிதேவர், இராமர், மூக்கையா, பசும்பொன் முருகன்,பழனி,கார்த்திக், மற்றும் டி.என். டி நல சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button