முதுகுளத்தூரில் வக்ஃப் சட்டத்திருத்த நகல் எரிப்பு போராட்டம்

முதுகுளத்தூர் :

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக , SDPI கட்சி சார்பில் இன்று தேசம் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக , SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் , வக்ஃப் சட்டத்திருத்த நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பாஞ்சுபீர் , மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் செய்யது சதக்கத்துல்லா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் முஹம்மது, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர் ரிஸ்வான், முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் ரைசூல் இஸ்லாம், ஒன்றிய செயலாளர் அப்துல் ஹமீது, முதுகுளத்தூர் நகர் தலைவர் காதர் சுல்தான், WIM நகர் தலைவர் பெனாசிர் , SDPI கட்சி நகர் பொருளாளர் இப்றாகிம், பரமக்குடி நகர் செயலாளர் நவாஸ் ஷெரீப், கடலாடி ஒன்றிய துணைத் தலைவர் அரபி முஜிபுதீன், முதுகுளத்தூர் நகர் இணைச் செயலாளர் ரம்ஜான் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அரசுக்கு எதிராகவும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராகவும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பிய பின்பு , மாவட்ட தலைவர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நகல், தீச்சுவாலைகளால் எரிக்கப்பட்டது.
