இராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மைப்பணி மற்றும் மரக்கன்று நடும் விழா

மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மைப்பணி மற்றும் மரக்கன்று நடும் விழா

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் மாவட்ட சாரணர் இயக்கம் மற்றும் இராமநாதபுரம் பச்சைக்குடை இயக்கம் சார்பில் இராமநாதபுரம் சேதுபதி நகரில் அமைந்துள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமைப் பூங்காவில் தூய்மைப்பணி மற்றும் மரம்நடும் விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டத்தின் கடுகுசந்தை, ரெகுநாதபுரம், புதுமடம் மகளிர், அரியாங்கோட்டை உள்ளிட்ட அரசுப்பள்ளி மாணவர்களும், ஆல்வின் மெட்ரிக், கிரியேட்டிவ் மெட்ரிக் உள்ளிட்ட தனியார் பள்ளிகளிலிருந்தும் 130 சாரண, சாரணியர் பங்கேற்றனர். மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் செலஸ்டின் மகிமைராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்சிங்ஜித் காலோன் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் தலைமை வகித்து மரக்கன்று நட்டு மரத்தின் மேன்மையை எடுத்துரைத்தனர்.

விழாவில் முன்னிலை வகித்த சாரணர் இயக்க மாவட்டச் செயலர் சிவா.செல்வராஜ் விதைகளிலிருந்து மரக்கன்று உருவாக்கி வளம்சேர்த்தலைப் பற்றி எடுத்துக் கூறினார். பசுமை முதன்மையாளர், பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் நிகழ்வினை ஏற்பாடு செய்து, மரக்கன்று உருவாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை காண்பதில் மரங்களின் பங்கினைக் குறித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் சாரண, சாரணியர் அனைவரும் பூங்காவில் மண்டிக்கிடந்த களைச்செடிகளை அகற்றினர். தொடர்ந்து சாய்சக்தி இன்ஸ்டிடியூட் முதல்வர் அனிதா மற்றும் 108 குழுவினர் முதலுதவி குறித்து செய்முறை விளக்கம்தந்து மாணவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button