வளைகுடா
அஜ்மானில் தொழிலாளர்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/dub14a-780x470.jpg)
அஜ்மானில் தொழிலாளர்களுக்கு இலவசமாக போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி
அஜ்மான் :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/dub14a-1024x768.jpg)
அஜ்மான் மாநகராட்சி தொழிலாளர் முகாமில்
அமீரக செம்பிறை சங்கத்துடன் இணைந்து
கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் தலைமையில்
தொழிலாளர்களுக்கு குளிர்காலத்தையொட்டி இலவசமாக போர்வைகள் வழங்கு நிகழ்ச்சி நடந்தது.
அமீரக செம்பிறை சங்க அதிகாரி ஷேக் முகம்மது முதீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் கிரீன் குளோப் அமைப்பு செய்து வரும் சமூகப்பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் போர்வை தானம் செய்தவர்களுக்கும், தன்னார்வலர்களாக செயல்பட்ட பள்ளிக்கூட மாணவ, மாணவியருக்கும் வாழ்த்து கூறினார். அதனை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 300 தொழிலாளர்களுக்கு போர்வை மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இமாத், அல்மாஸ் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.