இராமநாதபுரம்

மாணவர்கள் நல்ல முன்மாதிரிகளை உருவாக்குவது காலத்தின் தேவை: குத்புதீன் ஐபக்

மாணவர்கள் நல்ல முன்மாதிரிகளை உருவாக்குவது காலத்தின் தேவை: குத்புதீன் ஐபக்

கீழக்கரை:

நவீன காலத்தில் சமுதாய சிந்தனை உள்ள மாணவர்கள் ஒன்றுகூடுதல் நல்ல முன்மாதிரியான நிகழ்வு என்றும், கலாச்சார கட்டமைப்பில் மாணவர்களின் பங்கு முக்கியமானது என்றும் தமிழாசிரியர் மாநில அரசின் செந்தமிழ் விருது பெற்ற மானுட பிரியன் குத்புதீன் ஐபக் கருத்து தெரிவித்தார்.

SSF தேசியக் குழுவின் தலைமையில் தமிழ்நாடு கீழக்கரையில் நடைபெற்ற SSF தேசிய நிர்வாகத்தின் தென் மண்டல மாநாட்டைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய தமிழ் மாநில SSF ன் பொதுச் செயலாளர்
நிசார் இம்தாதி: ஆன்மிக தலைவர்கள் பலர் வாழ்ந்தபூமி கீழக்கரை.இந்திய கலாச்சார வரலாற்றில் சிறப்பு வாய்ந்த கீழக்கரையில் மாணவர் மாநாடு நடப்பது மிகவும் பொருத்தமானது.

மாணவர்கள் அடுத்த தலைமுறையை வழி நடத்த வேண்டும்.
உணவு,கல்விக்கு போதிய வாய்ப்பு இல்லாத ஒரு தலைமுறை நமக்கு முன் சென்றுவிட்டது.ஆனால் இன்று உணவும்,கல்வியும் தாராளம் கிடைக்கிறது ஆனால் நல்ல உயர்ந்த இலட்சியம் உள்ள மாணவர்கள் உருவாகுவதுதான் அரிதாக உள்ளது

அந்த நிலையை மாற்றி சமுதாயத்திற்கு பயன் உள்ள நல்ல
மாணவர்களை உருவாக்குதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்
என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை மாலை தொடங்கிய மாநாட்டில் SSF தென் மண்டலத்தின் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு,பாண்டிச்சேரி , தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்தியப் பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தேசிய செயலாளர் ஷெரீப் பெங்களூர்,
கீழக்கரை சய்யது ஹமீதா கல்லூரி முதல்வர் அலிஷா நூரானி, சுல்தானியா பேராசிரியர் ரஷீத் அதனி, SSF south zone செயலாளர் ஜாபர் மதனி ஆகியோர் தொடக்க கூட்டத்தில் பேசினர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் ஆன்மீகம் போன்ற தலைப்புகளில் வெவ்வேறு அமர்வுகள் இருக்கும்.

இந்த அமர்வுகள் கல்வியின் முக்கியத்துவத்தையும்
மாணவ சமுதாயம் செய்யவேண்டிய சமுதாய தொண்டு பகுதிகளையும் எடுத்துக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாஅத் (TMJ) மாநில பொதுச் செயலாளர்
ஹக்கீம் இம்தாதி சிறப்புரை மாலையில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button