இராமநாதபுரம்முதுகுளத்தூர்

மழலை மொழியில் துணை முதல்வர் உதயநிதிக்கு இளம் குத்துச் சண்டை சிறுமி மைதானம் கேட்டு கோரிக்கை!!

மழலை மொழியில் துணை முதல்வர் உதயநிதிக்கு இளம் குத்துச் சண்டை சிறுமி மைதானம் கேட்டு கோரிக்கை!!

முதுகுளத்தூர் :

இராமநாதபுரம் மாவட்டம்’முதுகுளத்தூர்’ பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவியர் மற்றும் இளம் சிறுமிகளுக்கு குத்துச்சண்டை பயிற்சி திறந்தவெளியில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் வந்து இந்தப் பகுதியில் உள்ள சிறுவர் சிறுமியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இதில் பயிற்சி பெற்று வரும் ஏழாம் வகுப்பு மாணவி ‘நித்திலா’ மயிலாடுதுறையில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 32 கிலோ எடை குறைவில் கலந்துகொண்டு மூன்றாம் இடம் பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சியானது, மதுரை,திருச்சி சென்னை, டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில்,
உடல் வலிமை தற்காப்பு கலையாக குத்துச்சண்டை பயிற்சி அமைவதால்,
இப்பகுதி மாணவர்களின் ஆர்வம் மிகுந்த மாணவ மாணவியர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி இன்றி திறந்த வெளியில் நாள்தோறும் காலை மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற நித்திலாவை கௌரவிக்கும் வகையில் சக மாணவர்கள் சால்வை மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்று ஊக்கமளித்தனர்.

இதில், பயிற்சி பெறும் மழலை மாணவியர் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதிக்கு தங்களது மழலை மொழியில்
‘உதயநிதி மாமா நல்லா இருக்கீங்களா’ மாமா, ‘எல்லா ஊருக்கும் ஸ்டேடியம் கட்டி கொடுத்து இருக்கீங்க மாமா எங்களுக்கும் கட்டிக் கொடுப்பீங்களா மாமா’ என கெஞ்சு மொழியில் உதயநிதிக்கு இளம் குத்துச் சண்டை சிறுமி மைதானம் கேட்டு மழலை மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button