தமிழ்நாடு

“ஏமாறாதீங்க!”: வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கான PoE நடத்திய விழிப்புணர்வு நடை !

“ஏமாறாதீங்க!”: வெளிநாட்டு வேலைக்குச் செல்வோருக்கான PoE நடத்திய விழிப்புணர்வு நடை !

இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயல்படும், புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அமைப்பின் (PoE) தமிழ்நாடு பிரிவு, நடத்தும் விழிப்புணர்வு நடை இன்று( பிப்.8) காலை 7.30 மணிக்கு சென்னை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது.

வெளிநாட்டில் அதிக சம்பளத்துக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி மோசடிகள் தொடர்ந்து நடக்கின்றன. சட்ட விரோதமாக செயல்படும் சில முகவர்கள் இது போன்ற மோசடிகளில் ஈடுபடுகிறாரகள். இவர்கள் மீது, மத்திய அரசின் புலம் பெயர்ந்தோர் நல அமைப்பு (PoE) நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மோசடி பேர்வழிகளிடம் மக்கள் ஏமாந்துவிடாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை எலியட்ஸ் கடற்கறையில் விழிப்புணர்வு நடை ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கிருஷ்ணமூர்த்தி, கமிஷனர், நான் ரெசிடென்ஸ் தமிழ் டிபார்ட்மெண்ட் “வெளியுறவுத் துறைமூலமாக வெளிநாடு செல்பவர்கள் பதிவு பெற்ற முகவர்கள் மூலமாகதான் செல்ல வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள். தமிழக அரசும் பல துறைகளுடன் இணைந்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் உள்ள நமது அலுவலகத்திலும், அதிகம் வெளிநாடு செல்பவர்கள் இருக்கும் ஏழு மாவட்டங்களிலும் அங்கிருக்கும் தன்னார்வு நிறுவனங்களுடன் சேர்ந்து பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இதுமட்டுமல்லாது, நமது அலுவலகத்தில் இருந்தும் 24 மணி நேரமும் செயல்படும் விதமாக ஐயப்பாடுகளைத் தீர்க்கும் விதமாக கட்டணமில்லா சேவைகளையும் வழங்கி வருகிறோம்.

வளைகுடா, மலேசியா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து செல்பவர்களுக்கு வரும் பிரச்சினைகளுக்கு உதவ ஒருங்கிணைப்பாளர்களும் தொடர்ச்சியாக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். PoE வந்தபிறகு அவர்களுடன் இணைந்து பதிவு பெறாத முகவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளியுறவுத்துறையில் பதிவு பெற்ற முகவர்கள் 200 பேர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லுங்கள்”.

ராஜ்குமார், ஐஎஃப்எஸ், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர், தமிழ்நாடு “வெளிநாடுகளுக்கு கூட்டிச் செல்கிறோம் என ஏமாற்றுபவர்கள் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இப்போது ஒருபடி மேலே போய், கூட்டிச் சென்று ஸ்கேம் செய்வதற்கு அவர்களை சைபர் ஸ்லேவாக பயன்படுத்துகிறார்கள். வெளிநாடு செல்பவர்கள் ஏமாறுவது மட்டுமல்லாது, அங்கு சென்று அவர்கள வைத்து நம்மையும் ஏமாற்றி பொருளாதாரா இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இந்த சைபர் ஸ்லேவில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகை கொடுத்தால் தான் வெளியே விடுவோம் என்கிறார்கள். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிதான் ‘பாத்து போங்க’. பதிவு பெற்ற முகவர்கள் மூலமாகதான் வெளிநாடு செல்கிறோமோ, டூரிஸ்ட் விசா இல்லாமல் சரியான விசா மூலமாக செல்கிறோமோ போன்ற பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் தெளிவுப்படுத்தி வருகிறோம்” என்றார்.

டாக்டர் சந்தீப் மிட்டல், ஐபிஎஸ் ஏடிஜிபி சைபர் கிரைம் பேசியதாவது, ”நம் நாட்டில் இருந்து வேலை செய்ய நிறைய பேர் வெளிநாட்டிற்கு போகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முறையான ஏஜென்சி மூலம் போகமாட்டார்கள். டூரிஸ்ட் விசா வாங்கி வெளிநாட்டிற்குப் போகிறார்கள். அங்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி ஸ்கேம் செண்டரில் வேலை பார்க்க வைக்கிறார்கள். டிஜிட்டல் அரெஸ்ட், ஸ்டாக் மார்கெட் என மக்களை அச்சுறுத்தும் ஃபோன் கால்கள் எல்லாம் ஸ்கேம் செண்டரில் இருந்துதான் வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பலர் அங்கு மாட்டிக் கொண்டு சைபர் அடிமை ஆகிவிடுகிறார்கள். இதுபோன்று வெளிநாடுகளில் யாராவது வேலை வாங்கித் தருவதாக உங்களிடம் சொன்னால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பதிவு செய்த டிராவல் ஏஜென்சி மூலம்தான் நீங்கள் செல்ல வேண்டும். இதுபற்றிய விழிப்புணர்வுக்காகதான் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை முன்னெடுத்து இருக்கிறார்கள்” என்றார்.

சுரேந்தர் பகத், ஐஎஃப்எஸ். புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் ஜெனரல் வெளியுறவு அமைச்சகம், “வெளிநாடு செல்பவர்கள் ஏமாறாமல் எப்படி பாதுகாப்பாகவும் முறையாகவும் வெளிநாடு செல்ல வேண்டும், அதற்கான வழிமுறைகள் எனென்ன என்பது பற்றிய விழிப்புணர்வாக ‘பாத்து போங்க’ நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம். இந்த வாக்கத்தான் தமிழகத்தின் அனைத்து மூலைகளில் இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்”.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button