மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம்!!
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tmmk1-780x470.jpg)
மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம்!!
இராமநாதபுரம் :
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tmmk1-1-1024x461.jpg)
இராமநாதபுரம் மாவட்டம்
மண்டபம் பேரூர், ராமநாதபுரம் நகர்,
கட்சியின் கொடி ஏற்றப்பட்டு
5நபர்களுக்கு ரூபாய் 1லட்சம் மருத்துவ உதவி,கல்வி உதவிகள் செய்யப்பட்டது.
திருப்புல்லாணி ஒன்றியம்
மோர்க்குளம் கிளை சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் 17ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
தமுமுக மாநில துணை பொது செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கான்
இஸ்லாமியப் பிரச்சார பேரவை(IPP) மாநில செயலாளர் மௌலவி அப்துல் காதர் மன்பஈ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மனிதநேய மக்கள் கட்சி துவங்கப்பட்டு 17ஆண்டுகள் மக்களுக்காக செய்த சேவைகள். சட்டமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆம்புலன்ஸ் சேவை, மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், பேரிடர் மீட்பு குழு, தொடர்ந்து தொய்வின்றி பணிகளை செய்து வரும் தமுமுக வின் அரசியல் பிரிவுவின்
மனிதநேய மக்கள் கட்சியின்
மனிதநேய சேவைகளை சிறப்பாக எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் கீழை பாதுஷா,துணை தலைவர் ரைஸ் இப்ராஹிம், இளைஞரணி செயலாளர் நைனா, இளைஞர் அணி துணைச் செயலாளர் அபுல் ஹசன், ஒன்றிய தலைவர் மர்வான் மாலிக், மண்டல செயலாளர் சுலைமான், நகர் தலைவர் ஜாகிர்பாபு கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மோர்குளம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/tmmk2-1024x461.jpg)