இராமநாதபுரம்
இராமநாதபுரம் : தேவநேயப் பாவாணரின் 123-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் :

பிப்ரவரி 7 அன்று தேவநேயப் பாவாணரின் 123-வது, பிறந்த தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட சாரண,சாரணியர் இயக்கம் மற்றும் பசுமை குடைகள் இயக்கம் சார்பில், இராமநாதபுரம், சேதுபதிநகர் 4-வது பிரதான சாலையில் உள்ள அன்னை சரஸ்வதி மகளிர் பசுமை பூங்காவில், இராமநாதபுரம் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் சிவ. செல்வராஜ் தலைமையில் சாரண பயிற்சி ஆணையர் செலஸ்டின் மகிமைராஜ், மற்றும் சாரண ஆசிரியர்கள் தன்ராஜ், சத்தியசீலன்,நாராயணன் ஆகியோரும் சாரணிய பயிற்சி ஆணையர் லட்சுமி வர்த்தினி அவர்களும் மற்றும் சாரணர்கள், சாரணியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர். இந்நிகழ்வை பசுமை முதன்மையாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார்.

