ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
ஏர்வாடி எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா
ஏர்வாடி :
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 24 வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு எலைட் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார்.
பொருளாளர் சையது அப்பாஸ் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முதல்வர் .R.வசந்தி வரவேற்புரையாற்றினார்.
இதில் ஏர்வாடி தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் நிலைய அலுவலர் அருள்ராஜ் ,கட்டிட கட்டுமான ஆலோசகர் சையத் ருக்னுதீன் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஏர்வாடி காவல் ஆய்வாளர் ஜீவரத்தினம் மற்றும் A.S.அப்துர் ரஹ்மான் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பின்பு சிறப்புரையாற்றினார் .
பின்பு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.இறுதியாக உதவி முதல்வர் நன்றி கூறினார்.