கீழக்கரையில் தவ்ஹீது முழக்க மாநாடு!
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/t1-780x470.jpg)
கீழக்கரையில் தவ்ஹீது முழக்க மாநாடு!
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/t1-1024x457.jpg)
கீழக்கரை :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் கீழக்கரையில் அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை) பத்து மாத செயல் திட்டத்தை முன்னிட்டு பிப்,2 அன்று தவ்ஹீத் முழக்க மாநாடு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் இப்ராஹிம் ஷாபிர் அவர்கள் தலைமையில், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் துவங்கிய இம்மாநாட்டின் துவக்கமாக,
பிற்பகல் நேரத்தில் இப்ராஹிம் நபியின் இனிய குடும்பம், இப்ராஹிம் நபியின் ஏகத்துவ பிரச்சாரம், காஃபத்துல்லா வரலாறு, மற்றும் வரதட்சணை, மது போதை, பிற வழிபாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிரான கண்காட்சி நடைபெற்றது.மேலும் சிறப்பு பட்டிமன்றம்
கொள்கை தடுமாற்றத்திற்கு பெரிதும் காரணம்! சமூகமா? தனி மனிதனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.இதில் நடுவராக தாவூத் கைசர் (மாநில துணைத் தலைவர்)
சமூகமே அபூபக்கர் misc (TNTJ பேச்சாளர்)
ஹபீஸ் misc (TNTJ பேச்சாளர்)
தனி மனிதனே என்ற தலைப்பில்
யாசர் அராஃபத் (TNTJ பேச்சாளர்)
புளியங்குடி அப்பாஸ் (TNTJ பேச்சாளர்)
அப்துல் ரஹ்மான் ஃபிர்தௌஸி (TNTJ பேச்சாளர்)
அவர்கள், இப்ராஹிம் நபியும் ஈமானிய குடும்பமும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சம்சுல்லுஹா ரஹ்மானி (TNTJ மேலாண்மை குழு தலைவர்) அவர்கள் இறுதி வெற்றி ஏகத்துவத்திற்கே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அப்துல் கரீம் ( மாநிலத் தலைவர்) அவர்கள் இறைச்செய்தி மட்டுமே இறை மார்க்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.கீழக்கரையில் நடைபெற்ற இம்மாநாட்டில்
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர்
இறுதியாக இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மாநாட்டு தீர்மானங்களையும் நன்றியுரையும் மாவட்டச் செயலாளர் தினாஜ் கான் வாசித்தார்கள்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/t2-1024x457.jpg)