கீழக்கரை : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு அட்டை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு !!
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk2-780x470.jpg)
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk1.jpg)
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு அட்டை மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு !!
கீழக்கரை :
இராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் கீழக்கரையில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் சொந்த நிதியில் 700 கபாடி வீரர்களுககு விளையாட்டு காப்பீடு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு காப்பீடு அட்டை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.மேலும் துணை முதல்வர் கூறுகையில், தமிழ்நாடு அரசுக்கே முன்னுதாரனமாக தொடங்கி உள்ள இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் -ஐ பாராட்டியும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பாராளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/klk2-1024x576.jpg)