இராமநாதபுரம்

கீழக்கரை : மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக தமிழக துணை முதல்வரிடம் கோரிக்கை மனு

கீழக்கரை :

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்க வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக கீழக்கரை பொதுமக்கள் நலன் சார்ந்த 9 அம்ச கோரிக்கை மனுவை அதன் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

1) கீழக்கரை நகராட்சி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2) கீழக்கரை மின் வாரிய அலுவலகத்திற்கு நிரந்தர லைன் மேன்கள் மற்றும் கூடுதல் மின் கணக்கீட்டு பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3) கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைசிதிலடைந்துபோக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் உடனடியாக சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

4) கீழக்கரை மீனவர்கள் நலன் கருதி அரசு கடல் உணவு பாதுகாப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

5) கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

6) கீழக்கரை காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

7) கீழக்கரையில் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து போக்குவரத்து காவலர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

8) கீழக்கரை நலன் சார்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் போதிய இடம் வசதி இருப்பதால் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9) கீழக்கரை மற்றும் சுட்டு வட்டார கர்ப்பிணி பெண்கள் நலன் கருதி உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button