இந்திய மாதர் தேசிய சம்மேளனம் – மாவட்ட குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/i1-780x470.jpg)
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் – மாவட்ட குழு கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/i1-1024x576.jpg)
ராமநாதபுரம்:
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட குழு கூட்டம் 01.02.2025 அன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் டி.ஆர்.மல்லிகா அவர்கள் தலைமை வகித்தார்.
மாநிலச் செயலாளர் தோழர் எம்.கண்ணகி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்சியின் மாநில அரசியல் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். இதில் CPI மாவட்டச் செயலாளர் என்.எஸ்.பெருமாள், AITUC மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கே.ஆர்.சுப்பிரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்
ஜி.லோகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
மாவட்டச் செயலாளராக – தோழர் ப.வடகொரியா தேர்வு செய்யப்பட்டார்.
துணைத் தலைவராக – தோழர் ஆர்.டி.உமாமகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார்.
நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
- உரிமைத் தொகை கிடைக்காத அனைவருக்கும் தமிழ்நாடு அரசு உரிமைத் தொகை வழங்க வேண்டும்.
- வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டில் மகளிருக்கு 50% வழங்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் கௌரவத் தலைவர் அன்னமலை மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
– செய்திக்காக, என்.கே.ராஜன்
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/i2-1024x576.jpg)
![](https://www.mudukulathur.com/wp-content/uploads/2025/02/i3-768x1024.jpg)