இராமநாதபுரம்

கற்றல் தொடர்பான புத்தாக்க பயிற்சி

இராமநாதபுரம் :

இராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரி கட்டிடவியல் துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) சார்பாக பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான ‘நிலையான நகர்ப்புறங்களில் வளர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி மற்றும் கற்றல் தொடர்பான புத்தாக்க பயிற்சி இணையதளம் வாயிலாக கடந்த ஜனவரி 2025, 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் சுமார் 200க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கழிவு மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இறுதி நாள் விழாவில் கல்லூரி முதல்வர் உதயகுமார் கலந்து கொண்டு ‘நிலையான நகர்புற வளர்ச்சியை மேம்படுத்துவதில் ஆசிரியர்களின் முக்கிய பங்கு பற்றி எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி.லாவண்யா மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.விஜயராகவன் ஆகியோர் செய்திருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button