இராமநாதபுரம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில்இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்

இராமநாதபுரம் :

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும்,

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி எம்பி அவர்களை
அவதூறாக பேசிய பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி,

25-01-2025 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனுவை மாநில பொருளாளர் எம் எஸ் ஏ ஷாஜஹான், மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் ஆகியோர் வழங்கினர்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவங்களை விரிவாக கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில்,
இளைஞரணி மாநில துணைத்தலைவர் நெய்னா முகம்மது, மாநில தகவல் தொழில் நுட்பஅணி செயலாளர் சாபிர்கான், இராமநாதபுரம் நகர தலைவர் முகம்மது காசிம், நகர செயலாளர் சிராஜுதீன், ஏர்வாடி நகர தலைவர் நவ்பாதுஷா ஆலிம், நகர செயலாளர் அஜ்மீர்கான், கீழக்கரை நகர இளைஞரணி கல்வத்தி, இலியாஸ், இராமநாதபுரம் நகர் செய்யது இபுராஹிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button