இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில்கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில்
கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும்,இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு கே.நவாஸ் கனி சாஹிப் அவர்களை அவதூறாக பேசிய பாஜகவை சார்ந்த வேலூர் இப்ராஹிம் என்பவரை கைது செய்ய வலியுறுத்தி, கடலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கோடீஸ்வரன் அவர்களிடம் புகார் மனுவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் மௌலவி அப்துல் ரஜ்ஜாக் உலவி,மாவட்ட செயலாளர் முஹம்மது இஸ்மாயில்,மாவட்ட பொருளாளர் முஹம்மது ஜக்கரியா,முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய செயலாளர் வழக்கறிஞர் அபூபக்கர் ரஸ்வி ஆகியோர்
நேரில் வழங்கினர்.
மனுவை பெற்றுக் கொண்ட கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள்,நடந்த சம்பவங்களை விரிவாக கேட்டறிந்து மாவட்ட கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், அமைதி பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் குழப்பங்களை விளைவிக்க முயலும் சங்க பரிவார்களின் சதித்திட்டம் நிறைவேறாது என மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி திட்டவட்டமாக தெரிவித்தார்.
நிகழ்வில் கடலூர் மாநகர செயலாளர் முஹம்மது ரபிக், கடலூர் ஐக்கிய ஜமாஅத் தலைவர் அப்துல் ஹாப்,கடலூர் மாநகர முஸ்லிம் லீக் வார்டு தலைவர்கள் ஷேக் முஹம்மது, ஒலி முஹம்மது, மஸ்தான், லால்பேட்டை நகர செயலாளர் முஹம்மது தையிப் முஹிப்பி,பொருளாளர் முஹிப்புல்லாஹ், கௌரவ ஆலோசகர் இலியாஸ், பண்ருட்டி நகரத் தலைவர் அப்துல் மாலிக்,நெல்லிக்குப்பம் நகர செயலாளர் அப்துல் ஹாதி MC, ஆகியோர் உடன் இருந்தனர்.