General Newsஇந்தியா

படித்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த ரஜினி

படித்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த ரஜினி

ரஜினி படித்த பெங்களூர் ஏ.பி.எஸ் கல்லூரி விழா பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 1950 இல் பிறந்த 75 வயது நிரம்பிய ரஜினிகாந்த் 1964- 1965 ல் கர்நாடகாவில் உள்ள ஏ.பி.எஸ் கல்லூரியில் அவரது தகப்பனார் ரானோஜிராவ் மற்றும் சகோதரர் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட்டால் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி ரிஜிஸ்டரில் அவர் மராத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கல்லூரி குடியரசு தினத்தன்று (ஜனவரி 26, 2025) ஞாயிறு மாலை பழைய மாணவர்கள் கூடுகை நடத்துகிறது. இது கல்லூரியின் 90 வது ஆண்டு. இங்கு பல பிரபலங்கள் படித்துள்ளனர். நடிகர் மைக்மோகன், உபேந்திரா, அரசியல் பிரமுகர்கள், பாரத ரத்னா, பத்மஸ்ரீ பெற்றவர்கள் என பலர் படித்துள்ளனர். பரபரப்பின் உச்சமே ரஜினி நிகழ்ச்சிக்கு வரலாம் என்பதே. அந்த கல்லூரியின் தலைவர் விஷ்ணு பாரத் ஆலம்பள்ளி தனது கோரிக்கையில் சூப்பர் ஸ்டாரை மாறுவேடத்தில் கூட நிகழ்ச்சிக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி திருமாறன் பாங்காக்கில் உள்ள கூலி படப்பிடிப்பில் தற்போது உள்ள ரஜினிகாந்திடம் சேர்ப்பித்ததாக தெரியவந்துள்ளது. இதுவரை எந்த பள்ளி கல்லூரி நிகழ்ச்சியிலும் ரஜினி கலந்து கொண்டதில்லை. அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் தனது நண்பர் கே. நடராஜ் கேட்டுக் கொண்டதால் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் மத்தியில் ரஜினி பேசுவார். குசேலன் திரைப்படத்தில் தான் படித்த ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பேசுவதாக காட்சி வரும். தனது மனைவி லதா நடத்தும் “தி ஆஷ்ரம்” பள்ளி நிகழ்ச்சியில் ஒருமுறை ரஜினி கலந்து கொண்டார்.

 இதுவரை வேறு எந்த விளம்பர படத்திலும் நடிக்காத சூப்பர் ஸ்டார் தற்போது தான் படித்த கல்லூரிக்காக ஒரு வீடியோவை தாய்லாந்திலிருந்து வெளியிட்டு அது உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

 தற்போதைய பேச்சு ரஜினி கல்லூரி நிகழ்ச்சிக்கு கூட்டத்தோடு கூட்டமாக வருவாரா என்பதுதான்.

 வீடியோவில் தான் படித்த அரசு பள்ளி பற்றியும் ரஜினி பேசியுள்ளார். தனது ஆசிரியர்கள் தன் படிப்பு மீது அதீத கவனம் செலுத்தியதையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 இன்று உள்ள பல பிரபலங்கள் தாங்கள் பயின்ற பள்ளி, பாடம் நடத்திய ஆசிரியர்களை நினைவில் கொண்டு மதிப்பதில்லை. ஆனால் ரஜினி தனது பள்ளி, கல்லூரி வாழ்க்கை, அங்கு நடித்த நாடகம் தான் தன்னை நடிகராக உருவாக்கிட துணை நின்றது என்று கூறியுள்ளார். ஏ.பி.எஸ் கல்லூரியில் சுமார் 5,000 பேர் கூடுகின்றனர். 20,000 பேர் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக விஷ்ணு பிரசாத் மற்றும் கிரண் குமார் தெரிவித்துள்ளனர்.

 சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தை நெருக்கமாக பார்க்க பலர் கூடுகிறார்கள். ரஜினி வருகிறாரோ இல்லையோ ஏபிஎஸ் கல்லூரி இனி உச்சகட்ட பிரபலமாகிவிடும். ரஜினியின் பெயரில் 1987 ல் ரத்ததான கழகம் துவங்கி நடத்தி வரும் திருமாறனிடமும் கல்லூரி வீடியோ வாங்கியுள்ளது. அவரும் ரஜினி படித்த கல்லூரியில் ரஜினி பெயரால் மாணவ மாணவியர் ஏற்று நடத்தும் ஒரு ரத்ததான கழகத்தை துவக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி தனது வீடியோவில் கன்னடத்தில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோக்களை அகண்ட திரையில் கல்லூரி திரையிடுகிறது.

 ஜாதி, மதம், இனம், மொழி என எவ்வித எல்லைகளும் தனக்காக ஏற்படுத்தாததால் தான் தமிழ் மக்கள் மட்டுமல்ல உலக மக்களே ரஜினியை கொண்டாடுகின்றனர்.

 ரஜினி அரசியலில் இல்லை தான். ஆனால் ரஜினி இல்லாமல் தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button