மணிமுத்தாறு காவல்துறை கமாண்டண்ட் க்கு பொது நல அமைப்புகள் கௌரவம்
மணிமுத்தாறு காவல்துறை கமாண்டண்ட் க்கு பொது நல அமைப்புகள் கௌரவம்
மணிமுத்தாறு :
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியன் கமாண்டண்ட் கார்த்திகேயனுக்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் சார்பில் “பொது ஜன மதிப்பீடு” என்ற கௌரவ பத்திரம் வழங்கப்பட்டது.
9வது பட்டாலியன் தளவாயாக பணிபுரிபவர் கார்த்திகேயன். இவர் ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார். முதலமைச்சர் விருதும் பெற்றுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பன் வேட்டையில் காவல்துறையின் பிதாமகன் என போற்றப்படும் வால்டர் தேவாரத்துடன் பணியாற்றியவர். வீரப்பன் வேட்டையில் கார்த்திகேயன் மேட்டூர் பகுதியில் இருந்து அளித்து வந்த தகவல்கள் மிக முக்கியமானதாகும். தினம் ஒரு மக்கள் சேவை என்பது மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதியில் பிரபலம். காவலர்களைக் கொண்டு பல பொது ஜன சேவைகளை கார்த்திகேயன் ஆற்றி வருகிறார்.
கார்த்திகேயனின் தனிச்சிறப்பு மற்ற காவல் துறை அதிகாரிகளை போல செய்யச் சொல்லி வேடிக்கை பார்ப்பதில்லை. அவரும் அதில் ஈடுபடுவார். மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதியில் மழை வளம் அதிகரித்திருப்பதற்கு கார்த்திகேயன் மற்றும் அவரது போலீஸ் குழு ஒரு முக்கிய காரணமாகும். பள்ளி மாணவ மாணவியர் தயாரித்த விதைப்பந்துகளை மணிமுத்தாறு பகுதியில் அவர்களை வரவழைத்து வீசச் செய்துள்ளார். ஆயிரக்கணக்கில் பனை விதைகளை விதைத்துள்ளார். அவரது பெருமைமிகு சேவைகளை பாராட்டி பொது நல அமைப்புகள் சார்பில் பொது ஜன மதிப்பீடு என்ற கௌரவ விருதினை சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், திருநெல்வேலி வரம் தொண்டமைப்பின் தலைவர் நாகராஜன், பசுமை ஜவகர் வழங்கினர். தினமலர் தினேஷ் சிறப்பு விருந்தினராக வந்து வாழ்த்தினார். காவல்துறை பணிகளுக்கு அப்பாற்பட்டு மரம் நடவு, முதியோருக்கு வீடு தேடி சென்று உதவி, மழை மற்றும் பேரிடர் காரங்களில் பள்ளி குழந்தைகளை காவல்துறை வாகனங்களில் பள்ளியில் விடுதல், புதர் மண்டிய ஆலயங்களை போலீஸ் சக்தியுடன் சுத்தப்படுத்துதல், சுற்றுவட்டார கிராமங்களுக்கு பாதுகாப்பு என கார்த்திகேயன் கமாண்டண்ட் யின் பணி விரிகிறது. பொதுமக்கள் தன்னார்வலர்கள் காவல்துறை அதிகாரிகள் பயனாளிகள் கார்த்திகேயனை வாழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை கமாண்டண்ட் தீபா செய்திருந்தார்.