General News

நேர்மையாளருக்கு கர்மயோகி காந்தி விருது

நேர்மையாளருக்கு கர்மயோகி காந்தி விருது

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் சலவைத் தொழிலாளி முத்துக்குமார். அவரது நேர்மைக்காக “கர்மயோகி காந்தி விருது” இன்று வழங்கப்பட்டது. குமாரின் அயனிங் சென்டர் பொட்டல் புதூர் ஆர்.சி. பள்ளி அருகே உள்ளது. அவரது கடைக்கு முக்கிய பிரமுகர்கள் தேடிச்சென்று இந்த கர்மயோகி காந்தி விருதினை வழங்கினர்.

 நிகழ்ச்சிக்கு சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் தலைமை தாங்கினார். எம். எஸ்.பி காய்கனி கடை சுப்பிரமணிய பாண்டியன், டெய்லர் காவூர் கனகராஜ், முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன் முன்னிலை வகித்தனர்.

 தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், செங்கோட்டை காந்தியவாதி விவேகானந்தன், சமூக நல ஆர்வலர் திருமாறன் நேர்மைக்கான 2025 கர்மயோகி காந்தி விருதை முத்துக்குமாருக்கு வழங்கினர்.

 பொட்டல்புதூர் ஆர். சி .பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி கெமில்டன் பாராட்டு விழாவில் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியையுடன் கலந்து கொண்டார்.

பள்ளி குழந்தைகளுக்கு நேர்மை, சத்தியவாழ்வு, சுத்த மனம் ஏற்பட இது போன்ற மனிதர்களும், சம்பவங்களும் துணை நிற்கும் என திருமாறன் தெரிவித்தார். பிறர் பொருளுக்கு ஆசைப்படாத சலவையாளர் முத்துக்குமாருக்கு விருது வழங்கப்பட்டதை பொட்டல்புதூர் பொதுமக்கள், வியாபாரிகள், பெண்கள் வரவேற்றனர். வருகை தந்த அனைவருக்கும் குமாரின் தந்தை, தாய் நன்றி கூறினர். விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு டாக்டர். விஜி நினைவாக அப்துல் கலாம் நூல்களை மதுரை பாலு மற்றும் திருமாறன் வழங்கினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button