அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூட 30 ஆவது ஆண்டு விழா
அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூட 30 ஆவது ஆண்டு விழா
அழகன்குளம் :
அழகன்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் இன்று (19-01-2025) நடைபெற்ற 30 ஆவது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
முகவை முத்தமிழ் மன்ற தலைவர், கம்பன் கழகப் பொதுச் செயலாளர், எழுத்தாளர் கவிஞர் பாடலாசிரியர் புலவர் மானுடப் பிரியன், கவிஞர் எழுத்தாளர் புலவர் அப்துல் மாலிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கூட நிறுவனர் ஹபிபுல்லா கான் தலைமை தாங்கினார். தாளாளர் பள்ளி முதல்வர் ராதா வரவேற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் சென்ற ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற 10,11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது.
சைபா-2025 விருது பெற்ற பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் அலி விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
இந்த சிறப்பான ஆண்டுவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் குரு லட்சுமி, உதயா, மற்றும் பிரியா சிறப்பாக செய்திருந்தனர்.