நினைவு
நினைவு…
காற்றிலே கலந்திருந்து
கவிதையில் தவழ்வுவந்து…
சோற்றிலே சுவையாகி
சுகத்திலே தாயாகி…
ஆற்றிலே கால்நனைத்து
மேட்டிலே தலைவாரி…
வாசலில் கோலமென
வந்தவளே தேவதையே..!
காவியமே உனைப்பாடி
கற்பனை பூச்சூடி…
மல்லிகை சரமாக
மங்கையின் தலைமீது…
மன்னவன் அழுகையிலே
மறைந்ததே
கண்களிலே…
மாயவன் உனையழைத்து
மலராக வைத்தானோ..!
கோதையே குணவதியே
கோமதி வான்மகளே..
தேவதை போற்றிடவே
தெளிவான இல்லறமே…
பூமியும் உனையழைத்து
தன்னுள்ளே வைத்ததென்ன…
சாமியே குலவிளக்கே
சரித்திரமாக நீ வாழ்க..!
துயரங்கள் நீகடந்த
தொண்டென வரமாக…
பாவங்கள் நீ துடைத்த
பாதைகள் மலராக…
எண்ணத்தில் வாழ்பவளே
ஏக்கத்தை தந்தவளே…
மாசில்லா பூந்தணலே
மலர்செண்டே நீவாழ்க…!
ஏக்கத்தில் எனைவிட்டு
எங்கு நீசென்றதுவே..
தூக்கத்தை தொலைத்து விட்டு துக்கத்தை தந்திடவா..
மனதில் வாழ்பவளே
மாதரசி நீவாழ்க…!
பொனவளே பொற்குடமே
போகுமிடம் சிறப்பாக. ..!
வாழ்ந்தவளே வளர்பிறையே
வாழுமிடம் வளமாக…
வசந்த முல்லை காலமென வாழ்க நீ
வரமாக…
இறைவனிடம் நீ இருந்து
இயன்றவரை அருளாக..
இயலாதோர் வாழ்க்கையில்
இனிமைதந்து
காப்பாயே…!
வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்