புது மடத்தில் கால்பந்து போட்டி.! வண்ணாங்குண்டு டி.டி.எப்.டி. கால்பந்து வீரர்களுக்கு முதல் பரிசு .!!
புது மடத்தில் கால்பந்து போட்டி.! வண்ணாங்குண்டு டி.டி.எப்.டி. கால்பந்து வீரர்களுக்கு முதல் பரிசு .!!
இராமநாதபுரம் :
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புதுமடம் ஜமாத்தார்கள் மற்றும் புதுமடம் புட்பால் கிளப் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து போட்டி நடத்தினர். இதில் பல ஊர்களை சார்ந்த 32 அணிகள் கலந்து கொண்டு நான்கு நாட்கள் இப் போட்டி நடைபெற்றது. இறுதிப் போட்டியில் வண்ணாங்குண்டை சார்ந்த டி டி எஃப் டி கால்பந்தணியும் புதுவலசை அணியும் இணைந்து விளையாடினர். இதில் வண்ணாங்குண்டை சார்ந்த டிடி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் அங்கமான டி டி எப் டி கால்பந்து வீரர்கள் முதல் பரிசை வென்றுள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு புதுமடம் ஜமாத் நிர்வாகிகள் ராசித், சாகுல் ஆகியோர் வீரர்களுக்கு விருதுகளையும் பரிசுத்தொகையும் வழங்கினர். இப் போட்டியில் இறுதியாக மூன்று கோல்களை அடித்து தஸ்பிக் அலி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வழி வகுத்ததற்கு பாராட்டுகளை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.