வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது கிராம மக்கள் பாராட்டு.!
கோவிலை பாதுகாக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு SDPI கட்சியின் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு.!
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினத்தில் வரலாற்று சிறப்புமிக்க பாசி அம்மன் கோவில் உள்ளது. 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் புதர்கள் மண்டி பராமரிப்பில்லாமல் சேதம் அடைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை சார்பில் இந்த கோவிலை புனரமைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி SDPI கட்சியின் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் அறநிலையத்துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்டிபிஐ கட்சியின் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் அகமது அவர்களுக்கு பாசிப்பட்டினம் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.