General Newsஇராமநாதபுரம்
சாலை மறியல் போராட்டம்
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் நீண்டகால நிலுவை கோரிக்கைகளான வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட கோரியும், கிராம ஊராட்சி ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல் மற்றும் இதற்கான ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநில துணைத்தலைவர் விஜயன் தலைமையில் கண்டன கோஷங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை கைது செய்து தனியார் மஹாலில் சிறைபிடித்து வைத்தனர்.