General Newsதமிழ்நாடு
போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
இளையான்குடி :
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி 03.01.2025 அன்று நடைபெற்றது.
கல்லூரி போதைப் பொருள் விழிப்புணர்வு குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார்.
சிறப்பு விருந்தினராக வேதியியல் துறை, இணைப்பேராசிரியர் சுல்த்தான் செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருட்களின் வகைகள், போதைப்பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். நிகழ்வில் 200 மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் போதைப் பொருள் விழிப்புணர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் காளிதாசன் நன்றி கூறினார்.