கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா!!
கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ஆம் ஆண்டு நிறைவு விழா!!
இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளியில் புகாரி ஷரிப் 10ஆம் ஆண்டு நிறைவு விழா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் தலைமையில் கீழக்கரை அனைத்து ஜமாஅத்களின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.முஹம்மது சதக்கத்துல்லா கிராத் ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.பி.எஸ்.எம்.ஹபிபுல்லா கான் (தலைவர், கீழக்கரை புகாரி ஷரீப் டிரஸ்ட்) வரவேற்புரை ஆற்றினார்.
புகாரி ஷரிப் ஒருங்கிணைப்பாளர் பவ்ஸுல் அமீன் அறிமுக உரை வழங்கினார். பழைய குத்பா பள்ளி ஜமாஅத் பரிபாலனக் கமிட்டி அபூபக்கர் சித்தீக் சிறப்புரை ஆற்றினார், ஹபீபுர் ரஹ்மான் ஆலிம், மகளிர் அரபிக் கல்லூரி செயலாளர் அஸ்கர் ரஹ்மான், காயல்பட்டினம் நகர ஜமாஅத்துல் உலமா செயலாளர்,பேராசிரியர் அல்-மதரசத்துல் ஹாமிதிய்யா ஆகியோர் சிறப்பு துஆ ஓதினார்கள்,அஹமது பிலால் நன்றி உரையாற்றினார்,மேலும் இந்நிகழ்வில் ஊரின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் கூட்டு துஆ பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் கீழக்கரை நகர் அனைத்து ஜமாத் ஆலிம்கள்,ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர் மற்றும் பொதுமக்கள், இளைஞர்கள், என திரளானோர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.