பரஸ்பர நிதி முதலீடு குறித்த கருத்தரங்கம்
பரஸ்பர நிதி முதலீடு குறித்த கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை சார்பாக 31.12.2024 அன்று பரஸ்பர நிதி முதலீடு மூலம் செல்வம் உருவாக்கல் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினரை உதவிப்பேராசிரியர் நசீர் கான் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகம், வணிகவியல்துறை, இணைப்பேராசிரியர், ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டு பரஸ்பர நிதி முதலீடுகள் குறித்தும், சந்தை அபாயங்கள் குறித்தும், லாபம் அடையும் முறைகள் குறித்தும் பேசினார்.
உதவிப்பேராசிரியர் நாசர் நன்றி கூறினார். நிகழ்வில் வணிகவியல்துறை மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.