General Newsதமிழ்நாடு
இலக்கிய செம்மல் விருது
கொடிக்கால்பாளையம் :
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகரம் சார்பாக கொடிக்கால்பாளையத்தில் நேற்று முதல் நாள் 29/12/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற SDPI கட்சியின் முப்பெரும் விழா அரசியல் எழுச்சி பொதுக் கூட்டத்தில் SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இலக்கிய செம்மல் விருது வழங்கி கவிஞர் E. M. ஜிப்ரில் கௌரவிக்கப்பட்டார்.
சமுதாய நலனுக்காக பணியாற்றி வருபவரும், தமிழ் மேல் பற்றும் இலக்கிய ஈடுபாடும் கொண்டு மாத, வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கை ஊடகத்திலும், இணைய வழியிலும் கட்டுரை கவிதைகள் துணுக்குகள் எழுதி வருபவரும், தான் எழுதிய தன்னுடைய எழுத்து பிரதிகளைத் தொகுத்து சுமார் 20 நூல்களுக்கு மேல் வெளியிட்டுள்ள கவிஞர் கொடிநகரான் முனைவர் ஹாஜி E. M. ஜிப்ரில் இலக்கிய செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது.