ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவருக்கு பாராட்டுக்கள்…!
ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவருக்கு பாராட்டுக்கள்…!
பரமக்குடி :
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரின் 39 வது புத்தகக் கண்காட்சி பரமக்குடி, ஆயிர வைசியர் ஜவுளி வியாபாரிகள் மஹாலில் நடைபெற்று வருகிறது.
பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர் பி கே ஹரி பிரசாத் தன்னுடைய தந்தையாரும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினருமான சரண்யா சில்க்ஸ் பி கே குபேந்திரன் உடன் வருகை தந்து மாணவனே ரூபாய் 3000 மதிப்புள்ள புத்தகங்களை தேர்வு செய்து வாங்கிய காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.
நான்காம் வகுப்பு பயிலும் பி. கே. ஹரி பிரசாத் அவர்களுக்கு பரமக்குடி நகரின் மூத்த எழுத்தாளர் உரப்புளி நா ஜெயராமன் அவர்கள் வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்கள்.
பள்ளி விடுமுறை முடிவடைந்த பின் அனைவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வருவது சிறப்பு என ஆயிர வைவசிய மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பள்ளியின் மாணவர்கள் தங்களுடைய பெற்றோருடன் வருகை தந்து கூப்பன்களை பயன்படுத்தி புத்தகமாக வாங்கிச் செல்வது பாராட்டுதலுக்குரியது.
வகுப்பறையை தாண்டிய நூல்கள் தான் இன்றைய போட்டி உலகத்திற்கு சரியான வழிகாட்டுதலை வழங்கும். அறிவை விருத்தி செய்யும்.
அதனை உணர்ந்து மாணவருடன் பெற்றோர்களும் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது பரமக்குடி நகரின் வாசிப்பு பழக்கம் மேன்மையாக உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
இந்த வகையில் நகரில் இருக்கும் மற்ற பள்ளிகளின் நிர்வாகமும் ஆலோசித்து பள்ளி மாணவர்களை அனுப்பி வைக்கலாம்.
நாளையுடன் புத்தகக் கண்காட்சி நிறைவடைவதால் கூப்பன்களை வீணாக்காமல் அதனை பயன்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டுகிறோம்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றம்.
பரமக்குடி