பசுமை ஆசிரியர் விருது 2024
பசுமை ஆசிரியர் விருது 2024
இராமநாதபுரம் :
இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளராக பணிபுரியும்
சு.விஜய குமார் என்பவர் இராமநாதபுரம் மாவட்ட சுற்றுச் சூழல் மன்ற மாணவர்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகத்திலும் / சுற்றுப்புறத்திலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு இராமநாத புரம் மாவட்டத்தை பசுமையுள்ள சூழ்நிலை யாக மேம்படுத்தியதை பாராட்டும் வகையில் ,தர்மபுரி மாவட்ட பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாவட்ட பசுமை ஆசிரியர் விருது வழங்கி பாராட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அ. சின்னராசு அவர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கனகராணி (இடைநிலை),
J.ரவி (தனியார் பள்ளிகள்), பிரின்ஸ் ஆரோக்கியராஜ் (தொ), சேதுராமன் (தொ)
மற்றும் முதன்மைக் கல்வி அலவலரின் நேர்முக உதவியாளர்கள் S.கர்ணன் (மேல்நிலை ), சி. இரவீந்திரன் (இடைநிலை) ஆகியோர்கள் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என பாராட்டினார்கள்.
அன்னார் 2021ம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.