கவிதைகள் (All)
சர்வதேச யோகா தினம் : 21.06.2024
சர்வதேச யோகா தினம் : 21.06.2024
யோகா செய்தால் யோகம் வருமா ?
யோகா செய்தால் கோபம் போகும்.
கோபம் போனால் அமைதி வரும்.
அமைதி வந்தால் அறிவு வரும்.
அறிவு வந்தால் தெளிவு வரும்.
தெளிவு வந்தால் ஞானம் வரும்.
ஞானம் வந்தால் மோகம் போகும்.
மோகம் போனால் ரோகம் போகும்.
ரோகம் போனால் சோகம் போகும்.
சோகம் போனால் நலம் வரும்.
நலம் இருந்தால் திறமை வரும்
திறமை வந்தால் செல்வம் வரும்.
செல்வம் வருவது யோகம்தானே ,
யோகா செய்வோம். யோகம் உண்டாகும்.
அன்புடன் ,
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.