கவிதைகள் (All)
தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024.
தேசிய மருத்துவர்கள் தினம். 1.7.2024.
நோய் நாடி நோய் முதல் நாடி தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பத் தணித்திடுவர்
தாய்போல் அக்கறையுடன் நம்மை
சேய்போல் அன்புடன் கவனிப்பர்.
மெய்வருத்தம் பாராது நமது
மெய்யதனை நன்கு பராமரிப்பர்.
கையறு நிலையில் வந்தாலும் ,நம்பிக்-
-கை கொடுத்துக் காப்பாற்றிடுவர்.
படைத்தது நம்மை இறையென்றால்
காப்பது மருத்துவத் துறையன்றோ.
மருத்துவம் என்பது தொழிலானாலும்
தனித்துவம் நிறைந்த சேவையுமாம்.
மகத்துவம் உணர்ந்து பணிபுரிகின்ற
மருத்துவர் தம்மை மதித்திடுவோம்
தன்னலம் கருதாது எந்நேரமும் அவர்கள்
நம் நலம் காக்க உழைத்திடுவார் -அந்த
பொதுநலம் கருதும் புனிதர்களின்
பொற்பாதம் பணிந்து வணங்கிடுவோம்.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்