டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 1 ந் தேதி முதல் வருடம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் டாக்டர் ஏ. அமீர் ஜஹான் அறிவிப்பு
டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
ஜனவரி 1 ந் தேதி முதல் வருடம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்
டாக்டர் ஏ. அமீர் ஜஹான் அறிவிப்பு
சென்னை :
டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்
ஜனவரி 1 ந் தேதி முதல் வருடம் முழுவதும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்த அறிவிப்பை அகில இந்திய வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரும், ஏ.ஜே.டிரஸ்ட் எஜுகேஷனல் கன்சல்டன்சி மற்றும் ஏ.ஜே. சுபைதா மெடிக்கல் செண்டரின் நிறுவனருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த டாக்டர் ஏ. அமீர் ஜஹான் வெளியிட்டார்.
இது குறித்து அவர் முதுகுளத்தூர்.காம் செய்தியாளரிடம் கூறியிருப்பதாவது :
டாக்டர் மன்மோகன்சிங் மிகச் சிறந்த பொருளாதார மேதை. அவரது மறைவு இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகுக்கே பேரிழப்பாகும். அவரது மறைவையையொட்டி ஏ.ஜே.டிரஸ்ட் எஜுகேஷனல் கன்சல்டன்சி உள்ளிட்ட குழுமத்தின் சார்பில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அவரது மறைவையொட்டி வருடம் முழுவதும் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இலவச மருத்துவ முகாம் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமானது ராஜீவ் காந்தி மறைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் நிறைவடையும். இந்த முகாம் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் இருக்கும்.
மேலும் தாம்பரம் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைக்கு ராஜீவ்காந்தி சாலை என பெயரிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.