இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் இருந்து மதுரை புறப்பட்ட பஸ்ஸின் டயர் வெடித்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இராமநாதபுரத்தில் இருந்து மதுரை புறப்பட்ட பஸ்ஸின் டயர் வெடித்ததால்
பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இராமநாதபுரம் :
இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று மாலை 5 மணியளவில் அரசு பஸ் 80 பயணிகளுடன் புறப்பட்டது.
பஸ் இராமநாதபுரம் அரசு கலைக்கல்லூரி அருகில் சென்ற போது திடீரென பஸ்ஸின் டயர் வெடித்தது. பின்புற டயர் வெடித்ததால் பயணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதனால் பயணிகள் சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வேறு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் வயதானவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிரமம் அடைந்தனர்.
பஸ்கள் முறையாக பராமரிக்காததால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.