இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா
இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா
இராமநாதபுரம் :
இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் தலைமை வகித்தார். நூலை அவர் வெளியிட முதல் பிரதியை அழகன்குளம் நஜியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் ஏ. ஆண்டனி ஆரோக்கியதாஸ் மற்றும் ஆங்கில ஆசிரியர் எஸ். ஜெகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அப்போது பேசிய முதுவை ஹிதாயத், பாலஸ்தீன வரலாறு நூலை கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் எழுதியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் அத்துமீறலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைவரும் வாங்கி படித்து பயனடைய வேண்டும் என்றார்.
விழாவில் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி பயிற்சியாளரும், அழகன்குளம் நஜியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியருமான இராமநாதபுரம் அப்பாஸ் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.