இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை உள்ள சாலையை சரிசெய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு
இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை உள்ள சாலையை சரிசெய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(தெற்கு)மாவட்டம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில், மாவட்டச் செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச் செயலாளர் உஸ்மான் மற்றும் ஃபாரூக் ஆகியோர் (NHAI) தேசிய நெடுஞ்சாலைத் துறை இராமநாதபுரம் அலுவலகத்தில் தலைமை அதிகாரி தினேஷ் அவர்களை சந்தித்து (NH32) இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரையிலான சாலையின் மிக மோசமான நிலை குறித்தும் உடனடியாக இதை சரிசெய்ய வலியுறுத்தியும் புகார் கடிதம் வழங்கினர்.
இச்சாலை தற்போது பெரும் பள்ளங்களும் விரிசல்களும் ஏற்பட்டு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் இரவு நேரங்களில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மிகப்பெரிய விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது குறித்து
TNTJ இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டத் தலைவர், கூறுகையில், “நாங்கள் இப்பகுதியில் ஆம்புலன்ஸ் சேவைகளை செய்து வருகின்றோம். கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில், இச்சாலையில் ஏறக்குறைய 7 விபத்துக்களை பதிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியதுடன்
“இச்சாலையின் பராமரிப்பு பணிகள் உடனே செய்யப்பட வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பில் அரசு உடனடி கவனம் செலுத்தவேண்டும் இச்சாலை விரைவில் பயணத்துக்கு பாதுகாப்பானதாக ஆக வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.