கவிதைகள் (All)
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்
திருக்கார்த்திகை வாழ்த்துக்கள்.
தரணி எங்கும் ஒளி பரப்ப
பரணி தீபம் ஏற்றுவோம்.
காரிருளை அகற்ற எங்கும்
கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.
அகங்கள் தோறும் விளக்கேற்றி
அக இருளைப் போக்குவோம்.
நல்லெண்ணை விளக்கேற்றி
நல்லெண்ணங்களை பரப்புவோம்.
அண்ணாமலையார் அருளாலே
அகிலம் நன்மை அடையவும்
உண்ணாமுலயம்மன் அருளால்
உலகமெல்லாம் உய்யவும்
கார்த்திகேயன் அருளாலே
கீர்த்தியோடு வாழவும்,
சாத்திரங்கள் சொன்னபடி
பிரார்த்தனைகள் செய்குவோம்.
அன்பு வாழ்த்துக்களுடன்
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
12.12.2024.