கவிதைகள் (All)
பிச்சைக்காரர்கள் உலகம்
பிச்சைக்காரர்கள் உலகம்.
ஆலயவாசலில் பிச்சைக்காரர்
சாலைஓரத்தில் பிச்சைக்காரர்.
தேர்தல்சீட்டுக்கு பிச்சைக்காரர்.
ஓட்டு கேட்டு வரும்பிச்சைக்காரர் .
லஞ்சம் கேட்பவர் பிச்சைக்காரர்..
ஊழல் செய்பவரும் பிச்சைக்காரர்.
கந்துவட்டிவாங்கிடும்பிச்சைக்காரர்
கலப்படம்செய்திடும் பிச்சைக்காரர்.
பதவிக்காக பிச்சை எடுப்போர்.
புகழுக்காக பிச்சை எடுப்போர்.
அருளுக்காக பிச்சை எடுப்போர்.
பொருளுக்காக பிச்சை எடுப்போர்.
அன்புக்காக பிச்சை எடுப்போர்.
ஆதரவுக்காக பிச்சை எடுப்போர்.
வசதிக்காக பிச்சை எடுப்போர்.
இவர்களையெல்லாம் விடவா கேவலம்
வாழ்வுக்காக பிச்சை எடுப்போர்.
தனக்குத் தகுதியானதை
தன் தேவைக்கேற்ப
தவறான வழியிலன்றி
தன்னுழைப்பினாலே
தக்கபடி ஈட்டிடுவோரைத்
தவிர அனைவரும்
தரணியில் பிச்சைக்காரரே.
சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.
6.12.2022.